திருமயம் அருகே பதுக்கி வைத்திருந்த 30 யூனிட் மணல் பறிமுதல்

திருமயம். பிப்.9: திருமயம் அருகே அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வடக்கு நல்லிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் சாலையோரம் குவித்து வைக்கப் பட்டிருப்பதாக திருமயம் தாசில்தார் பிரவீனா மேரிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அரிமளம் போலீசார் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற தாசில்தார் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வீடு கட்டுவதற்காக மணல் வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் அவர் கூறிய பதிலில் உண்மை இல்லாததால் அதிகாரிகள் மணலை பறிமுதல் செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பிரவீனாமேரி உத்தரவின் பேரில் அனுமதி இன்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை பறிமுதல் செய்து லாரி மூலம் திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.மேலும் இதுகுறித்து அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: