நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்

நாமக்கல், ஜன.29: நாமக்கல்லில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி பேசுகையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர் பதவிகளையும், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். கடந்த 8 மாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

எனவே, 100 சதவீதம் வெற்றி உறுதியாகி விட்டது. தலைமையின் உத்தரவுப்படிஇ கூட்டணி கட்சியினருக்கு இடங்கள் ஒதுக்கப்படும். அனைவரும் தீவிரமாக பணியாற்றி முழுமையாக வெற்றியடைய செய்யவேண்டும்,’ என்றார். தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்’ என்றார். கூட்டத்தில் நாமக்கல் எம்பி சின்ராஜ், பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் குழந்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி பழ. மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி அகதுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது முபீன், மதிமுக பழனிசாமி, சேகர், கொமதேக மாவட்ட செயலாளர்கள் மாதேஸ்வரன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: