சிவகாசி, ஜன. 29: வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் சங்கரமூர்த்திபட்டி, சுண்டங்குளம், ஆலங்குளம், பெரியார்காலனி, அண்ணாநகர் பகுதி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிலம்பம் போட்டியில் ஒற்றை கம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது.