சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

சங்கரன்கோவில், ஜன. 26:  சங்கரன்கோவில் தெற்கு தெரு உச்சினி மாகாளியம்மன் கோயில் மற்றும் சர்வ  சித்தி விநாயகர், சித்தர்பீடம் கோயில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கொரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்றனர். சங்கரன்கோவில் தெற்கு தெரு பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினி மாகாளியம்மன் கோயில் மற்றும் சர்வ சித்தி விநாயகர், சித்தர்பீடம் கோயிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக வருஷாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து உச்சினிமாகாளி அம்மன், சர்வ சித்தி விநாயகர், சித்தர்பீடம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் வஉசி இளைஞர் நற்பணி மன்றம், வஉசி சுதேசி இயக்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: