திமுக, அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள்

கரூர், ஜன. 26: மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் திருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகம் முழுதும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மத்திய நகரச் செயலாளர் கனகராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அதிமுக: மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவூருவ படத்துக்கு மாவட்ட அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் சிவசாமி, நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: