நாமக்கல் சிஇஓவின் பிஏ பள்ளி பணிக்கு மாற்றம்

நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (உயர்நிலைகல்வி) குமார் என்பவர், கடந்த 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வந்தார். அவர் தற்போது பள்ளி பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லை அடுத்துள்ள பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் கந்தசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (உயர்நிலை கல்வி) மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்று கொண்டார்.

Related Stories: