நடைபாதை தகராறில் ராணுவ வீரர் உள்பட 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜன.20:  கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி காலனியை சேர்ந்தவர் பூவரசன்(41). இவர் கிருஷ்ணகிரி ஆர்டிஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஜெயசீலன்(24) என்பவருக்கும், பொதுவழி நடைபாதை குறித்து பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம், மீண்டும் இது குறித்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பூவரசனை ஜெயசீலன், சேகர் மனைவி வளர்(28), வெற்றிவேல்(25), டெல்லியில் ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரரான ராமமூர்த்தி(38) ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பூவரசன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். இதேபோல் வெற்றிவேல், தன்னையும், தனது குடும்பத்தினரையும் பூவரசன், சரவணன்(28), அகில்மூர்த்தி(29), ராம்குமார்(27) ஆகிய 4 பேர் தாக்கியதாக போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: