வேலாயுதம்பாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது

வேலாயுதம்பாளையம், ஜன.19: வேலாயுதம்பாளையம் பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த 7பேரை போலீசார் கைது செய்தனர். வேலாயுதம்பாளையம் பகுதியில்  அனுமதியின்றி  மது விற்பனை நடைபெறுவதாக  வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி மற்றும் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்றனர். அதன்படி பெரிய ரங்கபாளையத்தில்  மது பாட்டில்களை விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு(45),  சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மது பாட்டிலை விற்பனை செய்த ராமநாதபுரம் கீழக்கோட்டை  அருகே மங்களம் பகுதியைச் சேர்ந்த வினோத்( 24), தளவாபாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கார்த்திகேயன்(61), புகளூர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் செங்கணம் பகுதியை சேர்ந்த மணிமுத்து( 27), வேலாயுதம்பாளையம் மலைக்கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் மது பாட்டில் விற்பனை செய்த மதுரைவீரன்(33 ),காந்திநகரில் மது பாட்டில் விற்பனை செய்த சேகர்( 36), புகழிமலை மலைப்பாறையில் மதுபாட்டில் விற்பனை செய்த குமார் (50) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர்கள்  விற்பனைக்காக வைத்திருந்த  35 மது பாட்டில்களை பறிமுதல்  செய்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: