பெரம்பலூர் மாவட்டத்தில் அலுவலர் சங்கத்தினர் விடுப்பு போராட்டம் ஊரகவளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடின

பெரம்பலூர்,ஜன.12:தமிழ் நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்க த்துடன் கடந்த ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்துசெய்து, அவரை பணி ஓய்வு ஓய்வில் செல் ல ஆணையிட வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்ப டை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள் அ னைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும். மற்ற அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளை யும் ஊராட்சி செலாளர்க ளுக்கு வழங்கிட அரசாணை வெளியிடவேண்டும். வட்டார வளர் ச்சி அலுவலர் நிலையிலி ருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவிஉய ர்வு அணைகளை காலதா மதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்கள் சங்கம் சார்பாக நேற் று மாநிலம் தழுவிய ஒட்டு மொத்த சிறுவிடுப்புப் போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் இய ங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இய க்குநர் அலுவலகம், ஊரா ட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் பணிபுரியும வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஊராட்சிசெயலாளர் வரை நேற்று சங்கத்தின் மாவட்ட த் தலைவர் மரியதாஸ் த லைமையில் 15பெண்கள் உள்பட 132 பேர் தற்காலிக சிறு விடுப்புப் போராட்டத் தில் ஈடுபட்டிருந்தனர். இத னால் வட்டாரவளர்ச்சி அலு வலர்அலுவலகங்கள் வெ றிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: