சோமரசம்பேட்டை அருகே மளிகைக்கடை குடோனில் 166 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி, ஜன.11: திருச்சி சோமரசம்பேட்டை அருகே மளிகைக்கடை குடோனில் 166 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதில் கடந்த மாதம் கோட்டை பகுதியில் உள்ள லாரி ஷெட்டில் 800 கிலோவிற்கும் அதிகமான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் திருச்சி அடுத்த சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்துவில் உள்ள மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக சோமரசம்பேட்டை எஸ்ஐ., கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கார்த்திக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் குடோனில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 166 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிந்த எஸ்ஐ கார்த்திக், உரிமையாளர் ஜாகிர்உசேன் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்.

Related Stories: