வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு

நாமக்கல், ஜன.9: நாமக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் தலைமையில் பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பேருந்துகளில் பயணிகள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் பயணம் செய்தல், சானிடைசர் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து ஓட்டுநர், நடத்துனவர்களுக்கு எடுத்துரைத்தனர். ஆட்டோகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச்சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் உடனடிருந்தனர்.

பள்ளிபாளையம்: கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல், பயணிகளை நின்றபடி ஏற்றிச்செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அரசு மற்றும் தனியார் பஸ்களில், இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது. அனைத்து பயணிகளும் முககவசம் அணிய வேண்டும், வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத பேருந்து நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வாளர் சத்யா எச்சரித்தார். திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,  அரசு போக்குவரத்து பணிமனையினர் மற்றும் போலீசார் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு பஸ்சாக ஆய்வு செய்து முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு பணிமனை மேலாளர் பாலசுப்பிரமணியம், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: