சமத்துவ பொங்கல் விழா

ஓசூர், ஜன.9: ஓசூர் அந்திவாடி, மிடிகிரிப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சென்னீரப்பா வரவேற்றார். விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சத்யா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், நகர துணை செயலாளர் திம்மராஜ், இலக்கிய அணி எல்லோரா மணி, எல்பிஎப் கோபாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், பூனப்பள்ளி மஞ்சுநாதப்பா, நகர அவைத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: