மாநகராட்சி பகுதியில் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் கண்காணித்து சீரமைக்க கோரிக்கை

கரூர், ஜன. 8: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நள்ளிரவில் குடிநீர் விநியோகம் செய்வதால் அதனை பயன்படுத்திட முடியாத நிலையில் மக்கள் உள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நெரூர், வாங்கல் மற்றும் கட்டளை காவிரி ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் நள்ளிரவு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி அமைக்காத பலர், குடிநீரை பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நாளை முழு ஊரடங்கு

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழுவதும் முழு ஊரடங்குக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படும்.

Related Stories: