நடுகுத்தகை ஊராட்சியில் 500 பேருக்கு நிவாரணம்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருநின்றவூர்: மழையால் பாதிக்கப்பட்ட 500பேருக்கு நிவாரண பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. குறிப்பாக, ஆவடி, திருநின்றவூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 23 செ.மீட்டர் வரை கனமழை பெய்தது. குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கிநின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மழைநீரை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு, மேற்கண்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருநின்றவூர் அருகே நடுகுத்தகை ஊராட்சி, நாச்சியார்சத்திரத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் ஏற்பாட்டில், நிவாரண உதவி வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளரும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவருமான டி.தேசிங்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு 500பேருக்கு அரிசி, போர்வை, பால், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், மா.ராஜி, பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பூவை.எம்.ஜெயக்குமார்,  திருநின்றவூர் நகரச் செயலாளர் தி.வை.ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் யமுனாரமேஷ்,  சுரேஷ்குமார், நடுகுத்தகை ஊராட்சி தலைவர் லெட்சுமி, துணைத்தலைவர் செந்தாமரை, மாவட்ட பொறியாளரணி துணை  அமைப்பாளர் நடுகுத்தகை எம்.மோகன், செயலாளர் இ.ஏ.சந்திரன், வார்டு உறுப்பினர் ஜமுனா ரமேஷ் பக்தவச்சலம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: