17வது கட்ட மெகா முகாம் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல், ஜன. 3: நாமக்கல் மாவட்டம் முழுவதும் 17ம் கட்டமாக நேற்று நடந்த முகாமில், 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில், 17ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பசு காதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 450 மையங்களில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற முகாம்களில் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் என 1500 பேர் ஈடுபட்டனர். இதில், 24 ஆயிரத்து 594 பேர்  கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பஸ் நிலையம், மார்க்கெட், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், முக்கியமாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் இருக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: