திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

நெய்வேலி, டிச. 31:நெய்வேலியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலி என்எல்சி தொமுச  அலுவலகத்தில் நடைபெற்றது. நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு, நெய்வேலி நகர பகுதியில் உள்ள 30 வார்டு நிர்வாகிகளிடம்  புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் படிவத்தை  வழங்கினார். நெய்வேலி நகர பொறுப்பாளர் பக்கிரிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், முன்னாள் நகர செயலாளர் புகழேந்தி, தொமுச தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் நன்மாறபாண்டியன், ரவிச்சந்திரன், நடராஜன், செந்தில், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்,  நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நெய்வேலி எம்எல்ஏ அலுவலகத்தில் பண்ருட்டி தெற்கு வடக்கு  ஒன்றியங்களில் உள்ள 43 ஊராட்சியின் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், புதிய உறுப்பினர் படிவத்தை சபா ராஜேந்திரன் எம்எல்ஏவிடம் பெற்றுக் கொண்டனர். பண்ருட்டி ஒன்றிய அவை தலைவர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: