வலங்கைமான் ஒன்றியம் சித்தன் வாழூரில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

வலங்கைமான், டிச. 30: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் சித்தன் வாழூர் ஊராட்சியில் தரிசு பகுதிகளை பசுமைவளம் மீட்பு பகுதிகளாக மாற்றுவது மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு பணிகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுள்ளன் ஆறு கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா கலையரசன், நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் இளவரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: