17வது ஆண்டு சுனாமி நினைவு தினம் கடலில் பாலை ஊற்றி மீனவர்கள் அஞ்சலி

பொன்னேரி: சுனாமி நினைவு தினத்தை கடலில் பாலை கொட்டி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சுனாமியின் 17வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பழவேற்காடு பகுதியை சேர்ந்த 42 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தினர். மேலும், லைட்ஹவுஸ் கடற்கரையோரம் 15 கிராம மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பாலை கடலில் ஊற்றி நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மீனவ கூட்டமைப்பு தலைவர் மதி, துணைத்தலைவர் அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வழகி எர்ணாவூரான், கூட்டமைப்பு மற்றும் கிராம நிர்வாகிகள் கூனம்குப்பம் ஜெய், கார்த்திக், திருமலைநகர் ரமேஷ், சிவலிங்கம், வைரவன் குப்பம் ஞானமூர்த்தி, ரமேஷ், லைட் ஹவுஸ் பரந்தாமன், நாராயணன், கரிமணல் இஞ்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: