கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டையில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி

கிருஷ்ணராயபுரம், டிச. 25: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட கிருஷ்ணராயபுரம் வட்டார அலுவலகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்கப்பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்மாவட்ட திட்ட அலுவலர் நாகலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் சந்திரமதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குறள்செல்வி வரவேற்றார். அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலனை உயர்த்த அக்கறை மற்றும் அரவணைப்போடு செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்கு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் பேசினார். ஊராட்சி பகுதிகளில் அங்கன்வாடி கட்டிட வசதி குறித்தும், கட்டமைப்பு வசதிகள் குறித்து ஊராட்சி தலைவர்களிடம் விவாதிக்கப்பட்டது.

திட்டத்தின் இலக்குகளை அடைய வளர்ச்சி கண்காணிப்பு, இணை உணவு முன்பருவக்கல்வி குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியபிரியா, மாவட்ட திட்ட உதவியாளர் அழகர்சாமி ஆகியோர் பேசினர். முகாமில் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மேற்பார்வையாளர் மனோன்மணி நன்றி கூறினார்.

Related Stories: