காரியாபட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

காரியாபட்டி, டிச. 24: காரியாபட்டி பகுதி நான்குவழிச்சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்ஐ ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் நான்கு வழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், காரியாபட்டி சிலோன்காலனி மணிகண்டன்(எ)அலாரமணி(37), முஸ்டக்குறிச்சி இருளப்பன் மகன் கார்த்தி(20), புல்லுாரை சேர்ந்த முருகன் மகன் மாயி(26), திருப்புவனம் தாலுகா தவத்தனேந்தலை சேர்ந்த சின்னப்பாண்டி மகன் வெள்ளையன்(19) எனத் தெரிய வந்தது. கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் மணிகண்டன் உட்பட 4 பேர் மீதும் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: