தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன் கோயிலில் துளசி திருக்கல்யாணம்

சாத்தான்குளம், டிச. 20: தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன் கோயிலில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் துளசி திருக்கல்யாணம் நடந்தது. மதி துளசி மஹாராணி பிருந்தாவனி, பிருந்தா, விஷ்வபூஜிதா, விஷ்வபாவனி, நந்தினி, கிருஷ்ண ஜீவனி, துளசி, புஷ்பசாரா ஆகிய 8 திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின்(இஸ்கான்) ஸ்தாபக ஆச்சார்யர் பக்தி வேதாந்த சுவாமி லபிரபுபாதரின் சீடர்கள் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். இதையொட்டி வெங்கடேஸ்வரபுரம்  ஹரே கிருஷ்ண பக்தர்கள் சார்பில் தெற்கு பேய்க்குளம் முத்தாரம்மன் கோயிலில்  துளசி  கல்யாணம் வைபவம் நடந்தது.

முன்னதாக துளசிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் பகவான் கிருஷ்ணன் பக்தி மார்க்கம் குறித்த சமய சொற்பொழிவு நடந்தது.   தொடர்ந்து பக்தர்கள் சார்பில் பக்தி கீர்த்தனைகள், துளசி கல்யாண வைபவம் நடந்தது.

இதில்  துளசிக்கு மாலைமாற்றி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து துளசி, துளசி மாடம் மற்றும் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. இதில் பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் குறித்தும், அதனை பக்தர்கள் வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  இதில் சாத்தான்குளம், பேய்க்குளம், திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், தச்சநல்லூர் பகுதியில் இருந்து  திரளான பக்தர்கள்  பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரபுரம் ஹரே கிருஷ்ண பக்தர்கள் செய்தனர்.

Related Stories: