சிறு பாலம், சாலையை சீரமைக்க கோரி மறியல் வேலூர் சத்துவாச்சாரியில்

வேலூர், டிச.15: வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டிய பள்ளங்களை சீரமைத்து சாலை அமைக்க வேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். அதேபோல், சத்துவாச்சாரி மந்தை வெளி பகுதியில் கடந்த மாதம் லாரி சென்றதால் சிறுபாலம் உடைந்தது, அதனையும் சீரமைக்க வேண்டும் என்று கோஷமிட்டு நேற்று மதியம் சர்வீஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், சாலை அமைக்கவும், சிறுபாலம் சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து ெசன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: