மண்டல பொது மேலாளர் தகவல் நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேவையாற்ற அழைப்பு

நாகை,டிச.13: நாகை அருகே அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தினை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி மற்றும் கல்வியறிவை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் தன்னார்வலர்களைக் கொண்டு பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன்படி இல்லம் தேடி கல்வி திட்டம் நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 82 மையங்களில் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அழிஞ்சமங்கலம், பாலையூர் ஆகிய பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடுகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளை கவரும் வகையில் விழிப்புணர்வு தப்பாட்டம், கரகாட்டம், பாடல், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 4 கலை குழுக்கள் மாவட்டம் முழுவதும் வட்டார கிராமங்களில் பயணம் செய்து இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக தன்னார்வலர்கள் தேர்வு செய்ய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 மையங்களில் திறன் அறிவு தேர்வு நடைபெற்று வருகிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வாலர்கள்// illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளம் மூலமாக தங்கள் பெயர் மற்றும் கல்வி தகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றார். முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: