நாகை விளையாட்டு அரங்கில் பராமரிப்பு பணிகள் முடிந்து பயன்பாட்டு வந்த நீச்சல்குளம்

நாகை, டிச.10: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீச்சல் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் பயிற்சிக்காகவும், நீர்நிலை சிகிச்சைக்காகவும் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக, சீரமைக்கப்பட்ட நீச்சல் குளம் திறக்கப்பட்டது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்து நீச்சல் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி சிக்கழக தலைவர் கவுதமன், நாகை எம்எல்ஏ முகமதுஷாநவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீச்சல் பயிற்சி பெறுவதற்கும் மற்றும் நீர்நிலை சிகிச்சை பெறுவோர்கள் உறுப்பினராக பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

Related Stories: