அண்ணா பதக்கம் பெற அழைப்பு திருவரங்குளம் அருகில் களங்குடியில் உலக மண்வள தின நிகழ்ச்சி

ஆலங்குடி, டிச. 9: திருவரங்குளம் வேளாண்மை விரிவாக்க மையம் சார்பாக உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் களங்குடி கிராமத்தில் கலைஞர் திட்டம் தொடர்பான உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது.துணை வேளாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தபயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி துறையின் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேல் மண்வளம் குறித்தும் மண்ணில் சத்துக்கள் மற்றும் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார். மேலும் மண் மாதிரிகள் சேகரிக்கும்போது ஏ வடிவம் போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி 15 செ.மீ அல்லது 23 செ.மீ பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும் இவ்வாறாக குறைந்தபட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள், மண் மாதிரி சேகரிக்க வேண்டிய காலம், கால குறைப்பு முறை பற்றியும், மாதிரி எடுக்கும் ஆழம் பற்றியும் பேசினார்.

வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் பேசுகையில், கலைஞர் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். மேலும் மண்வளத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பயிர் ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என்றும் ,மண் பரிசோதனை செய்யவேண்டும்,பயறுவகை பயிர்கள் பயிர் செய்தல்,அங்கக இயற்கை உரங்கள் மண்ணிற்கு இடுதல்,பசுந்தாள் உரம் பயிர் செய்தல்,உயிர் உரங்கள் இடுதல்,மண் பரிசோதனைக்கு தக்கபடிசமச்சீர் உரமிடுதல்,உயர் விளைச்சல் ரகங்களை பயிர் செய்தல் ,உழவியல் முறைகளை மேற்கொள்ளுதல், பலதானிய விதைப்பு செய்தல், சாகுபடி முறைகள் பயிர் தேர்வு செய்தல் ,நிலத்தினை தயார் செய்தல்,பயிர் சுழற்சி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் எடுத்து கூறினார்.இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் ஆதிமூலம், வேளாண்மை உதவி அலுவலர் பிரபாகரன் மற்றும் அட்மா திட்ட மேலாளர் நாகராஜன் மற்றும் உதவிதொழில் நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் நிதி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: