(தி.மலை) குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் புறக்கணிப்பு செய்யாறு வேளாண் விரிவாக்க மையத்தில்

செய்யாறு, டிச.8: செய்யாறு வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு வேளாண் விரிவாக்க மையத்தில் மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனால் காலை 10 மணி முதல் 11 30 வரை விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் குறைதீர்வு கூட்டத்தினை நடத்தக்கூடிய வேளாண்துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் விரக்தி அடைந்து கூட்டத்தை புறக்கணித்து அலுவலக வளாகத்தின் வெளியேதரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்பிறகு விவசாயிகளை தாசில்தார் சுமதி சந்தித்து, கூட்டத்திற்கு வருமாறு அழைத்தார். கொடிநாள் வசூலுக்காக ஆர்டிஓதலைமையில் சென்றதால் சிறிது நேரம் ஆகிவிட்டது என்று கூறினார்.

விவசாயிகள் வர மறுத்து பாழடைந்த கட்டிடத்தில் விவசாய கூட்டம் நடத்துவது உயிருக்கு ஆபத்தானது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வேளாண் அதிகாரிகள் கூட்ட அரங்கை கூட முறையாக பராமரிக்காமல் விவசாயிகள் பழைய கட்டிடத்தில் நடத்துவது ஏற்புடையதாக இல்லை. மேலும் விவசாயிகள் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்புதுப்பாக்கம் வேளாண் விரிவாக்க மையத்துக்கு வருவது சிரமமாக உள்ளது. எனவே கடந்த காலங்களில் தாலுகா அலுவலகத்தில் நடத்தியதைபோல் தாலுகா அலுவலககட்டிடத்தில் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில்கொடுக்கப்படும் மனுக்களில் ஒன்றுக்கு கூட தீர்வு காணாத நிலையில் விவசாயிகளின்உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் விவசாயிகள்குறைதீர்வு கூட்டம் தேவையே இல்லை என தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் விவசாயிகள் புறக்கணித்து கலைந்து சென்றனர். இதனால் வேளாண்விரிவாக்க மைய வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: