1008 சங்காபிஷேகம் ஆதர்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி முறைகேடு முதலீட்டாளர்களின் முதிர்வு தொகை பெற்று தர வேண்டும்

தஞ்சை, டிச.7: தஞ்சை ஆதர்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வழிகாட்டியாளர்கள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஆதர்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி இந்த சொசைட்டியில் மாதாந்திர சேமிப்பு, தினசரி சேமிப்பு, கூட்டு வட்டி வழங்கும் வைப்புத்தொகை, மாதாந்திர வருமான வைப்பு தொகை, பங்குத்தொகை என பல்வேறு அம்சங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு வரை முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு தொகையானது முதலீட்டாளர்களுக்கு சரியான முறையில் வழங்கப்பட்டது. இந்த சொசைட்டியில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு பல்வேறு முறைகேடுகள் காரணமாக எந்தவித காரணமுமின்றி சொசைட்டி கலைக்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக முதிர்வு தொகை மற்றும் மாதாந்திர வருமான வட்டி, பங்கு ஈவு தொகை ஆகியவை இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. மேலும் 4 லட்சம் ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 400 கோடி ரூபாய், நாடு முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டி உள்ளது. தஞ்சாவூரில் மட்டும் 15 ஆயிரம் கோடியும், கும்பகோணத்தில் ஆறு கோடி ரூபாயும் கிடைக்கப்பட்ட வேண்டியுள்ளது. இதில் நூறு முதல் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என வருமானத்திற்கு ஏற்ப பலரும் முதலீடு செய்துள்ளனர். எனவே இதுகுறித்து அரசு தனி கவனம் செலுத்தி முதலீட்டாளர்கள், ஆலோசகர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories: