வாக்கிங் சென்ற பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

திருச்சி, டிச.6: திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பில் தர்மலிங்கம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி பாரதி(53). பாரதி, தினமும் காலை தனது வீட்டிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பசுமை பூங்காவிற்கு சென்று நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை வீட்டிலிருந்து பசுமை பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுமை பூங்கா அருகே டூவீலரில் வந்த வாலிபர் ஒருவர், பாரதி கழுத்தில் இருந்த 5 பவுன் செயின், இரண்டரை பவுன் தாலியை பறித்து தப்பியோடினார். இது குறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து செயின் பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories:

More