கழிவுநீரை வெளியேற்றகோரி சாலை மறியல்

தோகைமலை, டிச.5: கரூர் மாவட்டம் நாகனூர் ஊராட்சியில் உள்ள கம்பத்தாம்பாறை ரோட்டில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் நாகனூர் பகவதியம்மன், காளியம்மன் கோவில் மற்றும் குடியிருப்புகளில் சூழ்ந்து உள்ளது. இதனால் கழிவுநீரை முறைப்படுத்தி வேறு வழியாக வெளியேற்றகோரி நாகனூர் பொதுமக்கள் நாகனூர் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பாக தோகைமலை பாளையம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாகனூர் விஏஓ சசிகலா தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சாலைமறியல் போராட்டம் செய்த அப்பகுதியை சேர்ந்த மணிவேல், முருகன், வெள்ளையன், விஜயன், தங்கவேல், சண்முகநாதன், சுரேஷ், செல்லையா, சுப்ரமணியன், அங்கம்மாள் உள்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

More