ராசிபுரம் அருகே 15 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி

ராசிபுரம், டிச.5: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகாமையில் 45 ஏக்கர் பரப்பளவில் தட்டாங்குட்டை ஏரி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தட்டாங்குட்டை ஏரி நிரம்பி உள்ளது. நேற்று பெய்த கனமழையால் தட்டாங்குட்டை ஏரி நிரம்பி சந்திரசேகரபுரம், தொட்டயப்பட்டி, அணைப்பாளையம் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் அருகே, 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு, சோளம், தட்டு உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. அரசு முறையாக ஓடைகளை தூர்வாரி, விவசாய நிலங்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘15 ஆண்டுக்கு பின் தற்போது தட்டாங்குட்டை ஏரி நிரம்பியதால், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு மகசூல் நன்றாக இருக்கும்,’ என்றனர்.

Related Stories: