குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை இளம்பெண் தர்ணா கணவர் மீது வழக்கு

திருச்சி, டிச.4: திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் திவ்யா(30). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், திவ்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இது குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா புகார் செய்தார்.

தொடர்ந்து, கோட்டை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டும் சரியான முறையில் விசாரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லையென கூறி கைக்குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் திவ்யா தர்ணாவில் ஈடுபட்டார். உதவி துணை கமிஷனர் வினிதா, திவ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் தர்ணா கைவிடப்பட்டது. தொடர்ந்து ஞானசேகரன் மீது கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தலைமறைவாக உள்ள ஞானசேகரனை போலீசார் தேடுகின்றனர்.

Related Stories:

More