குளித்தலை, கடவூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற 3 பேர் கைது

குளித்தலை, டிச. 4: கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று நெய்தலூர் காலனி பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (55) என்பவர் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த போது போலீசார் கைது செய்தனர். அதேபோல் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (57) என்பவர் டீக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த போது போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரிடமிருந்து மொத்தம் 46 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடவூர்: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், பாலவிடுதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கவரப்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பதாக பாலவிடுதி காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் கவரப்பட்டிக்கு போலீசார் ரோந்து சென்ற போது கவரப்பட்டியைச் சேர்ந்த வீரமணி என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ் 11 பாக்கெட் இருந்ததை கைப்பற்றி போலீசார் பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More