குற்ற வழக்குகளில் பறிமுதலான 8 டூவீலர்கள்

நாமக்கல், டிச.3: குமாரபாளையம் தாலுகா, பள்ளிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளிலும் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 டூவீலர்கள், நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள், குமாரபாளையம் தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமைதாரர்கள், தங்களது வாகனங்களுக்குரிய ஆவணங்களை மேற்படி காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, வாகனங்களை மீட்டெடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 15 நாட்களுக்குள் உரிமம் கோரப்படாத வாகனங்கள், பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More