புத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டிடம் சேதம்

முஷ்ணம், டிச. 3: முஷ்ணம் அருகே புத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 1995-96ம் ஆண்டு ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 27 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பள்ளியின் மேற்கூரை வழியே மழைநீர் கசிந்து மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கு வண்ணம் அடிக்கும் நிதி மூலம் வண்ணம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் சேதம் தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, விழுப்புரம் கட்டுமான செயற்பொறியாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளியை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து பள்ளி மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Related Stories: