ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

கும்பகோணம், ஏப். 23: தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இளங்கலை வேளாண் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் தங்களது ஊரக வேளாண் பட்டறிவு முகாமில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் புன்செய் நிலத்திற்கான ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விளக்க வகுப்பில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறுகிய, இடை கால, நீண்டகால வருமானம் தரும் பயிர்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற வாய்ப்புள்ள, பொருளாதாரத்தை தரக்கூடியவற்றை இணைப்பதாகும். இம்முறையில் ஒரு தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு தொழிலின் இடுபொருளாக பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தை சார்ந்த உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் ராஜூ ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் புன்செய் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும் மாணவிகளுக்கு தெளிவான விளக்க உரை அளித்தார். இந்நிலையத்தில் நெல் பயிரிடுதலோடு இணைந்து காளான், மாடு, ஆடு, வாத்து, மீன், முயல் போன்றவை வளர்க்கப்படுகின்றன.

Related Stories:

>