தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்

போச்சம்பள்ளி, ஏப்.23:  தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு, போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் தீயணைப்பு மீட்பு பணிகள்  நிலையத்தின் சார்பில்  தீத்தடுப்பு பிரசாரம் மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். நிலைய பணியாளர்களால் தீத்தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்படா வண்ணம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும், தீ விபத்துக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தீ செயலியை பதிவிறக்கும் செய்து பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories:

>