யானை தாக்கி முதியவர் பலி குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஏப்.23: குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுப்பன் (62). இவர் கடந்த 17ம் தேதி குடியாத்தம் வனப்பகுதியையொட்டி உள்ள மேல் கொள்ளப்பள்ளியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை சின்னகுப்பனை தும்பிக்கையால் தாக்கி விட்டு சென்றது.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சின்னகுப்பனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னகுப்பன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>