விருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ வேண்டுகோள்

காரியாபட்டி, ஏப். 20: விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திமுக நிர்வாகிகள், தோழர்கள் ஆங்காங்கே பொதுமக்கள் நலன் கருதி கபசுர குடிநீர் வழங்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து திமுக அமைப்புகளும், நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் நோய் தடுப்புக்கான விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும்.

இந்நிகழ்வுகளில் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிப்பதுடன், கலந்து கொள்வோர் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக முன்கூட்டி தகவல் தெரிவித்து இப்பணிகளை செய்திட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதால், நிகழ்ச்சி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறைப்படி முன்கூட்டி தகவலளித்திடவும், பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்திட வகை செய்யும் வண்ணம் கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>