போதையில் பைக் ஓட்டியவர் கைது

வேலூர், ஏப்.19: வேலூரில் அதிவேகமாக போதையில் பைக் ஓட்டிச் சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் அண்ணா சாலையில் சப் இன்ஸ்பெக்டர் குப்பன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் பைக்கை அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டிச் சென்றார். அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது அவர் கொசப்பேட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம்(51) என்பதும், போதையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>