விருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை

விருதுநகர், ஏப்.19: விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகரில் 1994ல் ரேஷன்கடை கட்டிடம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ின் கூட்டுறவுத்துறையில் அந்த கடை ஒப்படைப்பு செய்யவில்லை.

இதனால் ரேஷன்கடை கட்டிடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் பாடுபட்டனர். ஆனால், கூட்டுறவுத்துறையோ, கட்டிய கட்டிடத்தை ஒப்படைப்பு செய்யவில்லை என கூறி புறக்கணித்து விட்டது. எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடையை மாவட்ட நிர்வாகம் ஒப்படைப்பு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலங்களில் ஓடியது. இதனால் விஷஜந்துகள் குடியேறிய கட்டிடம் தற்போது ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. 27 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் உரிய பராமரிப்பின்றி பூட்டி கிடந்த நிலையில், தற்போது கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருகிறது. குடியிருப்புகள் அருகே உள்ள கட்டிடத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் முழுமையாக அகற்றி, புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்ட வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பல ரேஷன்கடைகளில் ஒன்றை அண்ணாநகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More
>