உடுமலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

உடுமலை, ஏப். 15: உடுமலை உழவர் சந்தை அருகே உள்ள நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். நூலகர் கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார் வாசகர் வட்ட ஆலோசகர், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர்நாயப்சுபேதார் நடராஜ் கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் பாலு ஆகியோர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் கண்டிமுத்து  நன்றி கூறினார்.

Related Stories:

>