மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி, ஏப். 15:  பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். பழவேற்காடு தோனிரவு பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (23) என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் திருப்பாலைவனம் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தினர். அப்போது, மனைவியின் நடத்தையில் பிரவீன்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த நவம்பர் 20ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், மனைவியை தலையணை மூலம் அழுத்தி பிரவீன்குமார் கொலை செய்தார். இதுெதாடர்பாக திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், ஜாமீனில் வெளிவந்தார். காட்டாவூரில் தனது குடும்பத்தினருடன் தங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்க சென்ற பிரவீன்குமார், நேற்று காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர். கதவை தட்டியும் அவர் திறக்கவில்ைல. இதையடத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பிரவீன்குமார் சிறையில் இருந்தபோது கடும் மனஉளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: