News Head District News Detail [Bold] [Italic] [Underline] [Subscript] [Superscript] [JustifyFull] [Justifyleft] [Justifycenter] [Justifyright] [InsertUnorderedList] [InsertOrderedList] [Outdent] [Indent] [ForeColor] [BackColor] [Cut] [Copy] [Paste] [Undo] [Redo] [InsertTable] [InsertImage] [CreateLink] [ViewSource] [H தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு குண்டாஸ்elp] Publish Up Calendar Publish Down Calendar KeyWords

பள்ளிப்பட்டு, ஏப். 15: பள்ளிப்பட்டு பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர்களை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் தொடர் வழிப்பறி, வீடுகளில் கொள்ளை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இதை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இதைதொடர்ந்து போலீசாரின்  வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த மாதம் 19ம் தேதி அதிகாலை  பள்ளிப்பட்டு அருகே ஆர்கே பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி, நகை, பணம் இருந்தது.

விசாரணையில், சென்னை குன்றத்தூரை சேர்ந்த அண்ணாமலை (30), குடியாத்தம் கார்த்திகேயபுரம் கிராமம் பாண்டியன் (29) என தெரிந்தது. மேலும் விசாரணையில் இருவரும்  கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது ெசய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அண்ணாமலை, பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரவிந்தன் கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories: