திருப்பூர் மாவட்டத்தில் 165 பேருக்கு கொரோனா

திருப்பூர், ஏப். 14: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,968 ஆக உயர்ந்தது.திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும், பாதிப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 165 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 80 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 420 ஆக உள்ளது. 1,318 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது.

Related Stories:

>