திருச்சி மலைக்கோட்டை கோயிலில் சித்திரை திருவிழாவை ரத்து செய்யக்கூடாது=

திருச்சி, ஏப். 14: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இந்தாண்டு கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோயில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்தார். இந்நிலையில் திருவிழாவை நடத்த கோரி சிவனடியார்கள், பக்தர்கள் 100க்கும் மேற்படடோர் நேற்று உதவி ஆணையர் விஜயராணியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோயில் வளாகத்திலேயே திருவிழாக்கள் வழக்கம்போல் நடந்து வருகிறது.

எனவே மலைக்கோட்டை தாயுமான சுவாமிகோயிலிலும் சித்திரை திருவிழாவை கோயில் வளாகத்திலேயே ஆகம விதிகளின்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த விஜயராணி, இதுபற்றி மாவட்ட கலெக்டருடன் கலந்துபேசி முடிவை நாளை(இன்று) தெரிவிப்பதாக கூறினார்.

Related Stories: