முககவச விற்பனை மீண்டும் அதிகரிப்பு'

திருப்பூர், ஏப். 13: திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, மக்களிடம், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்மக்கள் வசதிக்காக பல இடங்களில், முகக்கவசம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

துணியாலான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5 மணி வரை விற்கப்படுகிறது. நடமாடும் கடை மற்றும் ரோட்டோரத்தில் கடை விரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு முகக்கவசம், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. துணியாலான முகக்கவசம் அணியலாம் என்பதால் பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

Related Stories:

>