மற்றொரு உண்டியல் மாயம் திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திருவாரூர், ஏப்.12: திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 200 அபராதமும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தர விடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலும், போதிய தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் தங்களது வழக்கமான பணிகளை மேற் கொ ண்டு வருகின்றனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட எஸ்பி கயல்விழி ஆகியோரின் உத்தரவின் பேரில் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக, திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொ ) சண்முகம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 80 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ 16 ஆயிரம், தனிமனித இடைவெளியை பின் பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு ரூ 3 ஆயிரம் என மொத்தம் 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல் நன்னிலம் பேரூராட்சி மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பொது இடங் களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 150 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ 30ஆயிரம் அபாரதம் விதித்தனர். பிடிபட்ட நபர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர்.

Related Stories: