தென்காசி அன்ஸாரிய்யா மகளிர் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா

தென்காசி, ஏப்.12: தென்காசி அன்ஸாரிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் 26ம் ஆண்டு நிறைவுவிழா, வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா, 23ம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா, 6ம்ஆண்டு நாசிகா பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவர் வி.டி.எஸ்.ஆர்.முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். செயலாளர் கனியப்பா முன்னிலை வகித்தார். சென்னை செய்யது அப்துல்மாலிக் கிராஅத் ஓதினார். கல்லூரி முதல்வர் முகமது மீரான் வரவேற்றார். தென்காசி மாவட்ட அரசு முகைதீன் ஹஜ்ரத், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் சம்சுதீன், அமானுல்லா, முகம்மது மைதீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். சென்னை வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் தர்வேஷ் ரஷாதி வெள்ளிவிழா மலரை வெளியிட்டு 59 மாணவிகளுக்கு ஆலிமா பட்டத்தையும், 58 குடும்ப பெண்கள் மற்றும் 11 கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு நாசிகா பட்டமும் வழங்கி சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி அப்துல்கபூர் அகமது வெள்ளிவிழா மலரை பெற்றுக் கொண்டார். தொழிலதிபர்கள் அமானுல்லா, பாலச்சந்திரன், ஜாய் பில்டர்ஸ் சுல்தான், செய்யது இப்ராஹிம், ரகுமான்கான், திவான் பாவா, ஷேக் மைதீன் ஆகியோர் நினைவுபரிசுகளை வழங்கினர். பொட்டல்புதூர் நல்லாசிரியர் செய்யதுமசூது நன்றி கூறினார். பேராசிரியர் முகமது இக்பால் துஆ ஓதினார். நடுப்பேட்டை பள்ளிவாசல் செயலாளர் மீராஉசேன், குலாம்தஸ்ஹீர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: