திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பாஸ்கு விழாவில் திருத்தேர் பவனி

திண்டுக்கல், ஏப். 10 பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான உயிர்த்த ஆண்டவரின் திருத்தேர் பவனி நடைபெற்றது.

 திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தேரை அர்ச்சரிப்பு செய்து தொடக்கி வைத்தார். இந்த தேர்பவனி வியாகுல அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கி மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயத்தில் இருந்து கிளம்பி மதுரை ரோடு வழியாக பேகம்பூர் மசூதியை வந்தடைந்தது. அங்கு ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் நண்பர்கள், பங்குத்தந்தை உள்ளிட்டோருக்கு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.அதேபோல் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே பரம்பரை அறங்காவலர்கள் திருத்தேருக்கு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர். மும்மதத்தினரும் ஒற்றுமையுடன் கொண்டாடும் மதநல்லிணக்கத்திருவிழாவை காண ஏராளமானோர் திரண்டனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.  தேர் பவனியின் போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உயிர்த்த இயேசுவின் மடியில் கிடத்தி ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில்  திமுக நிர்வாகிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Related Stories: