கும்பகோணத்தில் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை கட்ட கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை, ஏப். 10: கும்பகோணத்தில் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை விரைந்து கட்டக் கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராமமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்திலுள்ள தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இங்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை. நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேர்வு ெசய்யப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீயணைப்பு நிலையத்தை கட்டுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், தீயணைப்பு நிலைய கட்டிட வேலைகள் முறையாக நடப்பதாக கூறி மனுவை முடித்து வைத்தனர். மின் கம்பத்திலிருந்து இணைப்பு வழங்க கட்டணமாக ரூ.1400 வசூலிக்கப்படுகிறது. தரைவழி மின்சாரம் வழங்க உபயோகிப்பாளர்கள் இடம் வரை கேபிள் கூட இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. மின்கம்பத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் தனியாக மின் இணைப்பு வாங்க வேண்டுமானால் ரூ.3000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Related Stories: